காவேரிப்பட்டினம் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அதிமுக கொடி ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலாசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். கட்சி கொடியினை துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி.முனிசாமி கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ. சி.வி. ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், பெருமாள் எம் பி, போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஜெயபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பேரூர் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய அவைத்தலைவர் வடிவேலன் மாவட்டத் துணை செயலாளர் வழக்கறிஞர் பிரிவு மோகன், நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகையன் ரத்தினம் குணசேகரன் மகேஷ், மற்றும் ராஜாஅண்ணாமலை, பண்ணந்தூர் பழனிச்சாமி, துரை, மஞ்சு சரவணன், அகரம் கருப்பண்ணன், சாம்பசிவம் மற்றும் கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், முனுசாமி சீனிவாசன் தியாகராஜன், கிருஷ்ணன் சின்னப் பையன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி லோகநாதன், நன்றியுரை ஆற்றினார்.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments